SAALIHEEN EDUCATIONAL AND CHARITABLE TRUST

ஸாலிஹீன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை

சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளில், நம்பிக்கைதான் வாழ்க்கையை ஒளிரச் செய்யும். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஸாலிஹீன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், எண்ணற்ற மக்களுக்கு கல்வியிலும், மருத்துவத்திலும் ஏற்றமிக்க பல சேவைகளில் பயனளிக்கிறது. இந்த சிறப்பான பயணத்தில் சேர்ந்து சேவையாற்றிட ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
M. அப்துல் ரஹ்மான் M.A., Ex. MP
தலைவர்

SMCH உருவாக்கத்தில் இதுவரையிலான பயணம்

இன்று கற்பித்திடுவோம் சிறந்த கல்வியை.
நாளை வளர்த்திடுவோம் நமது ஆளுமைத்திறனை.

என்றும் உயர்த்திடுவோம் சமூக மேம்பாட்டினை.

ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை கல்வி மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பு.
கல்வி மற்றும் சமூக நம்பிக்கையே ஒரு வளமான சமூகத்திற்குரிய தூண்கள் எனும் நோக்கில் இது தொடங்கப்பட்டது. பயனுள்ள பல நலத்திட்டங்களுடன் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய, இனிவரும் தலைமுறையினருக்கு சிறந்த சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம்.

ஒளிமயமான மற்றும் நம்பிக்கை நிறைந்த எதிர்காலம் உருவாக்கப்படும் பயணத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.

தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்ய மேம்பட்ட மருத்துவமனை

ஸாலிஹீன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (SMC மருத்துவமனை), ஸாலிஹீன் கல்வி மற்றும் அறக்கட்டளையின் கீழ், 50 படுக்கைகள் கொண்ட மேம்பட்ட மருத்துவமனையாக செயல்படுகிறது.

இந்த வசதி பரந்த அளவிலான சுகாதார சேவைகளை இலவசமாக வழங்குகிறது, பல்வேறு மருத்துவ தேவைகள் உயர்தர பராமரிப்புடன் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
எங்கள் மதிப்புமிக்க திட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
சுகாதாரத் துறைத் தலைவர்களை உருவாக்க உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரி

அனைவருக்குமான மருத்துவக் கல்வி, நோயாளிகளுக்கான பராமரிப்பு மற்றும் நவீனரக ஆராய்ச்சி செய்வதில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம். தேவைக்கேற்ற வசதிகளுடன், புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் மருத்துவ அறிவியலை நடைமுறைப் பயிற்சி வகுப்புகளுடன் சேர்த்து எதிர்கால மருத்துவ நிபுணர்களை உருவாக்குகிறோம்.

ஸாலிஹீன் செயல்பாடுகள்
வரவிருக்கும் திட்ட முயற்சிகள்
கல்வி நிறுவனங்கள்
தனிநபர்களுக்கு அத்தியாவசிய அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக, பொறியியல், சட்டம், மருத்துவம், நர்சிங் மற்றும் பலவற்றிற்கான கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களை நாங்கள் நிறுவுகிறோம்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நவீன தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துதல்.
உதவித்தொகை
கல்வி கற்பதற்கானப் பொருளாதார தடைகளை நீக்கி, தகுதியான மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
பாரம்பரிய இயற்கை மருத்துவம்
சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை இடம் பெறச் செய்தல்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு
ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்றோரின் உடல்நலம், குணநலன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு சேவைகள்.
சமூக நலன்
ஆதரவற்றோர் மற்றும் அனாதைகளுக்கான சிறப்பு காப்பகங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த பராமரிப்பு மற்றும் தங்குமிடம்.
பேரிடர் நிவாரணம்
இயற்கைப் பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குதல்.
சமூக நலனுக்கான கூட்டமைப்பு
நர்சிங் கல்வி, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவைகளுக்கு முன்னுரிமை அளித்து சேவையாற்றிடும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல்.
ஸாலிஹீனைப் பற்றி மேலும் அறிந்து, அதை முக்கியமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!
wpChatIcon